உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பாலஸ்தாபன விழா

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பாலஸ்தாபன விழா

திண்டுக்கல்; திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் நடபெறுவதை முன்னிட்டு நேற்று பாலஸ்தாபன விழா தொடங்கியது. மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று பாலஸ்தாபன விழா தொடங்கியது. அதிகாலை 5:00 மணி, மாலையில் யாகசாலை ஹோமங்கள் நடந்தன. விநாயகர், நவக்கிரக ஹோமம், கோ பூஜை நடந்தது. நாளை( ஜன.25 ) வரை காலை, மாலை என 2 வேளைகளிலும் யாக சாலை பூஜை, ஹோமங்கள் நடக்கிறது. ஜன.26ல் நடக்கும் 4-ம் கால ஹோமத்தில் காலை 9:25 மணிக்கு கோயில் திருமண மண்டபத்தில் அத்தி மரத்தினால் செய்யப்பட்ட கோட்டை மாரியம்மன் சிலைக்கு பாலஸ்தாபனம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா நிறைவுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கும் எனகோயில் நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !