உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி பகுதியில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

செஞ்சி பகுதியில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

செஞ்சி: செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 10.34 மணிக்கு விசாக நட்சத்திரம் மூன்றாம் பாதம் துலாம் ராசிக்கு ராகு பகவானும், கிருத்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதம் மேஷ ராசிக்கு கேது பாகவானும் பெயர்ச்சி அடைந்தனர். இதை முன்னிட்டு செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் மற்றும் ராகு, கேதுவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. துலாம், மேஷ ராசிதாரர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பரிகார தீபமேற்றினர். பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவலூர்பேட்டை: ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இறைப்பணி மன்றத்தினர் யாக ஏற்பாட்டினை செய்திருந்தனர். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !