கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
ADDED :648 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் தை சனிக்கிழமை மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.இதில் சர்வ அலங்காரத்தில் வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.