விழுப்புரம் பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :410 days ago
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி இன்று மாலை மூலவர் பசுபதீஸ்வரர், நந்திகேஸ்வரருக்கும் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் நந்திகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.