கச்சபேஸ்வரர் கோவிலில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம்
ADDED :4798 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட வெள்ளித் தேர் வெள்ளோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், திருமால் வழிபட்ட தலம். இக்கோவிலில் நன்கொடையாளர்கள் உதவியுடன், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், வெள்ளித் தேர் உருவாக்கப்பட்டுள்ளது. தேர், 21 அடி உயரம், எட்டு அடி அகலம் கொண்டது. தேரின் அடிப்பாகத்தை சுற்றி, சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. தேர் மீது, 200 கிலோ வெள்ளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று காலை தேர் வெள்ளோட்டம் நடந்தது. இரவு தேராட்டம் நடந்தது.