காளஹஸ்தி சிவன் கோயிலில் எழுத்தறிவித்தல் சிறப்பு நிகழ்ச்சி
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று (3ம் தேதி) எழுத்தறிவித்தல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காளஹஸ்தி கோயிலில் (அக்ஷர தீவேன) என்ற சிறப்பு உற்சவம் ஆண்டு தோறும் எழுத்தறிவித்தல் என்ற பெயரில் சாஸ்திரப் பூர்வமாக நடத்தப்பட்டன. அக்ஷர தீவானாவை முன்னிட்டு முன்னதாக கோவில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தில் உள்ள சுபத மண்டபம் மற்றும் நுழை வாயிலில் மாலைகளுடன் கூடிய வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் குரு தட்சிணாமூர்த்தி சன்னதியிலும் சிறப்பு மலர்களால் அலங்கரித்து, சரஸ்வதி தேவியை வழிபட்டனர். நகரத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். "ஓம் நம சிவாய" என்று பலகைகளில் எழுதி குழந்தைகள் கல்வியை துவங்கினர். கோயில் சார்பில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பென்சில்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன.