பழநி முருகன் கோயிலில் வருடாபிஷேகம்; உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :323 days ago
பழநி; பழநி முருகன் கோயில் பாரவேல் மண்டபத்தில் நேற்று மதியம் வருடாபிஷேகம் நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரத்தில் வலம் வந்தது. அதன் பின் உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம் உச்சிக்கால பூஜையில் நடைபெற்றது. யாக பூஜையை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் குழுவினர் நிகழ்த்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.