உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் கொடிமரம் சீரமைப்பு துவக்கம்

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் கொடிமரம் சீரமைப்பு துவக்கம்

வில்லிவாக்கம்: வில்லிவாக்கத்தில், பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கொடிமரம் சேதமடைந்து இருந்ததால், அதை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். நம் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதையடுத்து, மழையால் கொடிமரத்தின் செப்பு தகடுகள் சேதமடைந்தன; உள்மரம் நல்ல நிலையில் உள்ளது என, கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்தது. அத்துடன், பிப்., 3ல், சீரமைக்கும் பணி துவங்கும் என, தெரிவித்திருந்தது. இதன்படி, நேற்று அதிகாலை, ஆகம விதிப்படி பூஜையுடன், கொடிமரத்தை சீரமைக்கும் பணியை, கோவில் நிர்வாகம் துவக்கியது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !