ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு திரிசூலம் காணிக்கை
ADDED :212 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு டில்லி பக்தர்கள் 3 திரிசூலத்தை காணிக்கையாக வழங்கினர்.ராமேஸ்வரம் திருக்கோவியிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் உ.பி., ம.பி., டில்லி, அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பக்தர்களுக்கு இக்கோயில் குலதெய்வமாக உள்ளது. இதனால் வட மாநில பக்தர்கள் நினைத்த காரியம் வெற்றி அடைந்ததும் காணிக்கைகளை தாராளமாக வழங்குகின்றனர். அதன்படி டில்லி சேர்ந்த விவசாய பக்தர்களுக்கு கோதுமை அறுவடையில் அதிக மகசூலும், கூடுதல் வருவாய் கிடைத்தது. இதனால் குலதெய்வமான ராமேஸ்வரம் கோயிலுக்கு 5 அடி முதல் 10 அடி உயரத்தில் வெண்கலத்தில் தயாரித்த 3 திரிசூலத்தை இன்று கோயில் நகர வீதியில் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலுக்கு காணிக்கையாக நிர்வாக அதிகாரிகளிடம் வழங்கினர்.