ஜெருசலம் செல்ல விண்ணப்பம் தேதி நீட்டிப்பு!
ADDED :4790 days ago
சென்னை: ஜெருசலம் செல்ல அரசு வழங்கும், நிதிஉதவி பெற விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு, வரும், 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ரூபாய் 20 ஆயிரம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்கான விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள் என, ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது.மேலும், காலக்கெடுவை, வரும், 20ம் தேதி வரை நீட்டித்து, அறிவிப்பு வெளியாகி உள்ளது.