பழநியில் காவடி எடுத்து வந்து பா.ஜ., தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம்
ADDED :254 days ago
பழநி; பழநியில் தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில் பா.ஜ., மாநில தலைவர் காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். பழநியில் தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை எடுத்து வந்து திருஆவினன்குடியில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் படிபாதையில் காவடியுடன் சென்றார். பக்தர்கள் வெளியேறும் பாதையில் சென்ற போது போலீசார் தடுத்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் அனுமதித்தனர். படிப்பாதையில் சென்ற அவருடன் பொதுமக்கள் கைகுலுக்கினர். அதன் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் கட்சியினர் உடன் சென்றனர்.