பழநி முருகன் கோயில் வந்த கோயில் காளை
ADDED :297 days ago
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு யானைபாதை வழியாக காளை உடன் வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு வருகின்றனர். நேற்று மேல்கரைபட்டியை சேர்ந்த மக்கள் கோயில் காளையுடன் வந்தனர். அலங்காரத்துடன் வந்த காளை கிரிவலம் சுற்றி வர முருகன் கோயிலுக்கு யானைபாதை வழியாக அழைத்து சென்றனர். மேளதாளத்துடன் சென்ற காளை கோயில் வெளி பிரகாரத்தில் வலம் வந்து கீழ இறங்கியது. பக்தர்கள் மேல்கரைப்பட்டி கோயில் பூசாரி தண்டபாணி தலைமையில் முருகனை தரிசித்து சென்றனர்.