உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராக்கத்தம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒயிலாட்ட நிகழ்ச்சி

ராக்கத்தம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒயிலாட்ட நிகழ்ச்சி

அவிநாசி; அவிநாசி ராக்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி சேவூர் ரோட்டில் செங்காடு பகுதியில் எழுந்தருளியுள்ள ராக்கத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு ஆசிரியர் கனகராஜின் சங்கமம் கலைக்குழுவினரின் தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நிகழ்ச்சி வ.உ.சி. திடலில் நடைபெற்றது. இந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பாரம்பரிய கிராமிய பாடல்களுக்கு ஒயிலாட்டம் ஆடினர். நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !