காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி விழா; சிறப்பு பூஜை
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி விழாவைக் கொண்டாடும் விதமாக கோயிலில் பல்வேறு சுகந்த மலர்களால் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியை கொண்டாடுவதற்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பிரமாண்டமாக கண்கள் மிளுரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயில் அதிகாரிகள் பல்வேறு வகையான மலர்களால் கோயிலை அழகுபடுத்தினர். கோயில் முழுவதும் மணம் வீசும் பல வகையான மலர்களாலும் நிரம்பியுள்ளது, கோயிலில் சாமி தரிசனம் வரும் பக்தர்களுக்கு இனிமையான மயங்கும் நறுமணத்தை வழங்கும் பலவகையான மலர்களாலும், கோயிலில் எங்கு பார்த்தாலும், மின் விளக்குகளின் ஒளியின் இடையில் வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியைக் கொண்டாட ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்து, கோயில் அதிகாரிகள் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.