உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் சிவன் கோவில்களில் சிவராத்திரி வழிபாடு

விழுப்புரம் சிவன் கோவில்களில் சிவராத்திரி வழிபாடு

விழுப்புரம்; விழுப்புரம் சிவன் கோவில்களில் மகா சிவாரத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. விழுப்புரம் பழைய நிலையம் அருகேவுள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு முதல் கால பூஜை, இரவு 9:00 மணிக்கு 2ம் கால பூஜை, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. நள்ளிரவு 1:00 மணிக்கு 3ம் கால பூஜை, இன்று அதிகாலை 4:00 மணிக்கு 4ம் கால பூஜை, கோ பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவிலும் சிவாரத்திரி வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !