உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

கூடலுார் சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

கூடலுார்; கூடலுார் சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி விழாவில் விடிய விடிய நடந்த நான்கு கால பூஜைகளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


கூடலுார் சீலைய சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. தர்ம ரட்சன சமிதியின் 1008 சிவநாம அர்ச்சனை நடந்தது. நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகள் நடத்த பெண்களுக்கு சிவலிங்கம், சிவன் பார்வதி படம், அர்ச்சனை பொருட்கள் வழங்கப்பட்டன. சிவனுக்கு ஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டது. மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. பிரசாதம் வழங்கப்பட்டது. 


கூடலுார் தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கோயில் சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இருந்தபோதிலும் பக்தர்கள் முக்கிய திருவிழாக்களை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவை இரவு முழுவதும் நான்கு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை பாடி இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். சிவன் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !