சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா; மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி
ADDED :261 days ago
சிதம்பரம்; சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில், இரண்டாம் நாளான நேற்று, மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:30 மணிக்கு சிதம்பரம் கலைவாணி இசை நாட்டியாலயா மாணவர்கள் பரதம், அமெரிக்கா ஐஸ்வர்யா பாஸ்கர் பரதம், அமெரிக்கா பிராணமய சூரி மற்றும் குழுவினர் கூச்சுப்புடி நடனம், சென்னை கவுசல்யா ஸ்ரீநிவாசன் பரதம், சென்னை மங்கை பங்கன் நாட்டிய சிலம்பம் கவின்கலை மையம் நாடக நிகழ்ச்சி நடந்தது. அதனையடுத்து, சென்னை ஸ்ரீதேவி நிருத்யாலயா பரதம், மும்பை மஞ்சுகோஷா மோகினி ஆட்டம் களரி நடனம், கொல்கத்தா கவுடிய நிருத்ய பாரதி நடனம் மற்றும் சென்னை சிருஷ்டி குருகுல் பரதத்துடன் நிறைவு பெற்றது.