காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம் கோலாகலம்
திருப்பதி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 21-ஆம் தேதி கண்ணப்பர் கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று அதிகாலை ஆதி தம்பதியினர் (ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரின்) திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது .நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி வரை நடைபெற்ற இந்த திருக்கல்யாண உற்சவத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீகாளஹஸ்தியில் திரண்டு சாமி அம்மையார்களை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ பொஜ்ஜல. சுதிர் ரெட்டி தம்பதியினர் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி பாஜக ஒருங்கிணைப்பாளர் கோலா ஆனந்த் தம்பதியினர் மற்றும் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் சாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டனர்.