தேர்வில் வெற்றி பெற வேண்டி லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :585 days ago
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மாசி புதன்கிழமையை முன்னிட்டும் பள்ளிக் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற வேண்டி, கோவிலில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.