சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் 7ம் ஆண்டு வருடாபிஷேக விழா
ADDED :250 days ago
செஞ்சி; சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. செஞ்சி, சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோயிலில் 7ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு முனீஸ்வரனுக்கு பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியம் மற்றும் கலச நீர் கொண்டு விசேஷ அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மலர் அலங்கரமும், வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாரதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.