உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா

சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா

தியாகதுருகம்; தியாகதுருகம் அடுத்த சித்தலூர், பெரியநாயகி அம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த, பிப்.26,ம் தேதி துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சர்வ அலங்காரத்தில் உற்சவர் வீதி உலா நடந்தது. தொடர்ந்து இன்று மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதில் அம்மன் காளி அலங்காரத்தில் எழுந்தருளி மணிமுக்தா ஆற்றை ஒட்டி உள்ள மயானத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலையில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழகம் சார்பில், கள்ளக்குறிச்சி மற்றும் தியாக துருகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !