அறம்செய விரும்பு
ADDED :211 days ago
சிவனை தாங்கும் நந்தியை தர்மத்தின் வடிவமாக கருதி ‘அறவிடை’ எனக் குறிப்பிடுவர். அறம் என்றால் ‘தர்மம்’, விடை என்றால் ‘காளை’. ஆக, கடவுளையே தாங்கும் சக்தி தர்மத்திற்கு உண்டு. வாழ்வில் நாம் தர்மத்தை காப்பாற்றினால், தர்மம் நம்மை காக்கும் என்பர். ‘தர்மோ ரக்ஷதி; ரக்ஷித:’ என இதைக் குறிப்பிடுவர். நாம் உலகை விட்டுச் செல்லும் போது பணம், சொத்து எதுவும் நம்முடன் வராது. செய்த தர்மத்தின் பலனான புண்ணியம் அல்லது அதர்மத்தின் பலனான பாவம் நிச்சயம் வரும். இதையே, ‘பற்றித் தொடரும் புண்ணிய பாவங்களே’ என்பார்கள் மகான்கள். இதனால் தான் ‘அறம்செய விரும்பு’ என்கிறார் அவ்வையார்.