/
கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் நிறுவல்
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் நிறுவல்
ADDED :308 days ago
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் வளாகத்தில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை வழங்குவது குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்ட இயந்திரத்தில் ரூ.10 நோட்டு அல்லது காயின் செலுத்தினால் உடனடியாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சள் பை கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11:00 மணிக்கு ஓ.என்.ஜி.சி., அலுவலர்கள் மூலம் இந்நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. ஏராளமானார் கலந்து கொண்டனர்.