கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சனி சிறப்பு வழிபாடு
ADDED :297 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பங்குனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. விழாவில் சர்வ அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.