உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் நாளை துவக்கம்

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் நாளை துவக்கம்

திருவள்ளூர்; திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, நாளை விக்னேஸ்வரர் உற்சவத்துடன் துவங்கி, ஏப்., 3 வரை 12 நாட்கள் நடக்கிறது. காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வருவார். தொடர்ந்து, 12 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை வேதபாராயணமும், 30ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருமுறை திருவிழாவும் நடைபெறுகிறது. 


உற்சவ விவரம்: நாள் உற்சவம்


மார்ச் 23 விக்னேஸ்வரர் உற்சவம், மாலை 6:00 மணி

24 கொடியேற்றம், காலை 6:00 மணி, சிம்ம வாகனம், இரவு 7:00 மணி

25 ஹம்சவாகனம், காலை 7:30 மணி, சூரிய பிரபை, இரவு 7:00 மணி

26 பூதவாகனம், காலை 7:30 மணி, அதிகார நந்தி சேவை, இரவு 7:00 மணி

27 நாகவாகனம், காலை 7:30 மணி, சந்திரபிரபை, இரவு 7:00 மணி

28 மயில் வாகனம், காலை 7:30 மணி, ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி தரிசனம், இரவு 7:00 மணி

29 அஸ்மான கிரி வாகனம், காலை 7:30 மணி, யானை வாகனம், இரவு 7:00 மணி

30 ரத உற்சவம், காலை 7:30 மணி, தடாக பிரதட்சனம், இரவு 7:00 மணி

31 பிச்சாடனர் உற்சவம், காலை 7:30 மணி, திருக்கல்யாணம், இரவு 7:00 மணி, குதிரை வாகனம், இரவு 9:00 மணி


ஏப்., 1 சிவிகை பல்லக்கு, காலை 7:30 மணி, புஷ்ப பல்லக்கு, இரவு 7:00 மணி

2 நடராஜர் அபிஷேகம், விமானம், தீர்த்தவாரி, காலை 8:00 மணி, ராவணேஸ்வர வாகனம், இரவு 7:00 மணி, துவஜா அவரோஹணம், 8:00 மணி

3 மஹா அபிஷேகம், காலை 10:00 மணி, தொட்டி உற்சவம், பந்தம்பரி, இரவு 6:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !