சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி, சித்திரை மாத பூஜை முன்பதிவு துவக்கம்
ADDED :247 days ago
தேனி; சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, சித்திரை மாத பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது கட்டாயம். சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா ஏப்., 1 முதல் ஏப்., 11 வரை நடக்கிறது. அதே போல் சித்திரை மாத பூஜை ஏப்.,10 முதல் 18 வரை நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏப்.,1 முதல் ஏப்., 18 வரை தரிசனத்திற்கான முன்பதிவு துவங்கியது. பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பங்குனி உத்திர கொடியேற்றம் ஏப்.,2, ஆரட்டு விழா ஏப்.,11, சித்திரை விஷூ பூஜை ஏப்.,14ல் நடக்கிறது.