உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
ADDED :200 days ago
கோவை; உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா நாயுகா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சம்பத் வர ஜெயந்தி எனப்படும் கும்பாபிஷேகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் பங்குனி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் வாசுதேவ புண்ணியாகம், பஞ்ச சூக்த பாராயணங்கள்,வேத பாராயணம் கலச ஸ்தாபனம், வேதிகா அர்ச்சனை அதை தொடர்ந்து தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அக்னி பிரதிஷ்டை ஹோமம், மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம் ஆகியன நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உற்சவர் ஸ்ரீதேவி .பூதேவி சமேதரராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.