சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா ஏப்.2ல் தொடக்கம்!
திருவனந்தரபுரம்; சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா ஏப்.2ல் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா வரும் 2ம் தேதி நடக்கிறது. அதற்காக ஏப்.1ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் ஏப்.2ம் தேதி காலை 9.30 மணியளவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். அன்று முதல் ஏப்.11ம் தேதி வரை ஆராட்டு விழா நடக்கிறது. விழாவின் போது நாள்தோறும் வழக்கமாக நடைபெறும் பூஜைகளுடன், உத்சவ சிறப்பு வழிபாடும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். அதன் பின்னர் ஏப்.10ம் தேதி இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. விஷூ பண்டிகை ஏப்.14ம் தேதி நடக்க உள்ளதை முன்னிட்டு ஏப்.18 வரை சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.