கிணத்துக்கடவு வீரமாத்தி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
ADDED :194 days ago
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில் இன்று திருவிழா நடந்தது. கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 25ம் தேதி, கருப்பராயன் அழைத்து வரும் நிகழ்வு, கலசம் முத்தரிது அம்மன் அழைக்கும் நிகழ்வுடன் துவங்கியது. இன்று 26ம் தேதி, காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், ஆராதனை மற்றும் அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்வில், செட்டியக்காபாளையம் சுற்று வட்டார கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.