/
கோயில்கள் செய்திகள் / நாளை சூரிய கிரகணம்; பழநி முருகன் கோயிலில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
நாளை சூரிய கிரகணம்; பழநி முருகன் கோயிலில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
ADDED :193 days ago
பழநி ; பங்குனி அமாவாசையான நாளை (மார்ச்.29) சூரிய கிரகணம் நிகழ்கிறது. இருப்பினும் பழநி முருகன் கோயிலில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வழக்கமாக சூரிய, சந்திர கிரகணத்தின் போது பழநி முருகன் கோயிலில் அனைத்து சந்நிதிகளும் அடைக்கப்படும். வரும் மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை, இந்திய நேரப்படி பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி, மாலை 4.17 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால் அன்று வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என பழநி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.