உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி அனுமார் கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றம்

பரமக்குடி அனுமார் கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றம்

பரமக்குடி; பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயில் ராமநவமி விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


ராமர், சீதை, லட்சுமணன் மூலவராக அருள்பாலிக்கும் கோயிலில் எதிரில் கருடன் உள்ளார். மேலும் ஆஞ்சநேயர் புளிய மரத்தில் குடிகொண்டு புனிதப்புளி ஆஞ்சநேயராக பக்தர்கள் மரத்தை வழிபாடு செய்கின்றனர். இங்கு உள்ள கொடிமரத்தில் இன்று காலை 11:45 மணிக்கு கருடக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு அனைத்து வகையான அபிஷேகங்கள் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ராமர் வாமன அவதாரத்தில் வீதி உலா வந்தார். ஒவ்வொரு நாளும் காளிங்க நர்த்தனம், பாண்டுரங்கன், கூடலழகர், கள்ளழகர், தவழும் கண்ணன், 2கருட சேவை, யானை வாகனத்தில் உலா வர உள்ளார். ஏப்.,5 பாயாச கட்டளை, ஏப்.,6 அன்று ராம நவமி, மறுநாள் ஏப்.,7 சீதா கல்யாணம் நடக்கிறது. ஏப்.,9 இரவு ஆஞ்சநேயர் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !