திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :203 days ago
திருத்தணி; திருத்தணி காந்திநகர் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மஹாபாரத சொற்பொழிவும், இரவு உற்சவர் அம்மன் திருவீதியுலா நடந்து வருகிறது. நேற்று நண்பகல் உற்சவர் அர்ஜூனனுக்கும், திரவுபதியம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். வரும் 13ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்கிறது.