தொரப்பாடி குமரகோவில் பங்குனி உத்திர திருத்தேர் உற்சவம்
ADDED :186 days ago
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த தொரப்பாடி குமரகோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி, திருத்தேர் வீதியுலா நடந்தது. பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் உள்ள குமரகோவில் ஜெயபாடலழகி சமேத ஜெயகால நாதேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சண்முகநாத சுவாமி கோவிலில் 17ம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று 10ம் தேதி காலை திருத்தேர் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். நாளை 11ம் தேதி காலை 5:00 மணிக்கு மகாஅபிஷேகம், 7:00 மணிக்கு காவடி ஊர்வலம், மதியம் மகா தீபாராதனையும், மாலை 6:00 மணிக்க உற்சவர் வள்ளி தேவசேனா சண்முகநாதர் வீதியுலா நடக்கிறது.