உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் ராமகிரி நரசிங்க பெருமாள் கோயிலில் தேரோட்டம்

திண்டுக்கல் ராமகிரி நரசிங்க பெருமாள் கோயிலில் தேரோட்டம்

குஜிலியம்பாறை; திண்டுக்கல் மாவட்டம் ராமகிரி நரசிங்க பெருமாள் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.குஜிலியம்பாறை ராமகிரியில் உள்ள 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் பங்குனி பிரம்மோற்ஸவ விழா ஏப். 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை தொடர்ந்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் நடந்தது. இன்று காலை 8:50 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள்தேர் வடம் பிடிக்க திருத்தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் கோயிலை வந்தடைந்தது. கும்பாபிஷேக திருப்பணிக்கமிட்டி தலைவர் கருப்பணன், கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் திவ்யலட்சுமி, கோயில் மணியம் சதாசிவம், கோயில் அர்ச்சகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !