உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருவருக்கும் ஒரே நட்சத்திரம்

இருவருக்கும் ஒரே நட்சத்திரம்

திருப்பதிக்கு வராக÷க்ஷத்திரம் என்ற புராணப் பெயர் உண்டு. கோயில் அருகிலுள்ள சுவாமி புஷ்கரணி என்னும் தெப்பக்குளத்தின் வடமேற்குமூலையில் வராகமூர்த்திக்கு கோயில் இருக்கிறது. பூமிதேவியை மடியில் தாங்கியபடி பூவராகசுவாமியாக, பெருமாள் தரிசனம் அளிக்கிறார். திருமலைப்புராணப்படி, இவரே வெங்கடேசருக்கு திருமலையில் இடம் அளித்தவர். அதனால், இவரை வணங்கிய பிறகே பெருமாளை தரிசிக்கவேண்டும் என்ற நியதி பின்பற்றப்படுகிறது. நாடி வருவோருக்கு ஞானம் அருள்பவராக இருப்பதால் இவருக்கு ஞானப்பிரான் என்ற திருநாமம் உண்டு. வெங்கடாஜலபதிக்கு நைவேத்யம் படைப்பதற்கு முன் இவருக்கு நைவேத்யம் செய்வர். வராகமூர்த்திக்கும், வெங்கடேசருக்கும் அவதார நட்சத்திரம் திருவோணம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !