உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு கேது பெயர்ச்சி; யாருக்கு யோகம்.. பரிகாரம் செய்ய வேண்டிய ராசி எது..?

ராகு கேது பெயர்ச்சி; யாருக்கு யோகம்.. பரிகாரம் செய்ய வேண்டிய ராசி எது..?

நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப்பாதையில் இவர்கள் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேரெதிர் ராசியில் இருக்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர்.  விசுவாவசு ஆண்டு சித்திரை 13 (ஏப்.26) சனிக்கிழமை மாலை 4:20 மணிக்கு ராகு மீனத்தில் இருந்து கும்பத்திற்கும், கேது கன்னியில் இருந்து சிம்மத்திற்கும் பெயர்ச்சியடைந்தனர்.இதை முன்னிட்டு கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட ராகு கேது கோயில்களில் லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.ராகுவின் சஞ்சாரத்தினால் யோகப் பலன் பெறும் ராசி; மேஷம், மிதுனம், கன்னி, தனுசுசுமாரான பலன்களைக் பெறும் ராசி; ரிஷபம், சிம்மம், மகரம்பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசி; கும்பம், கடகம், விருச்சிகம், மீனம்.ஸ்லோகம் :அர்த்த காயம் மகா வீர்யம்சந்திரா தித்ய விமர்தனம்ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்தம் ராஹும் ப்ரணமாம்யஹம்பொருள்: பாதி உடலைக் கொண்டவரே! பெரும் வீரரே! சந்திர, சூரியரை கிரகணமாக பிடிப்பவரே! சிம்ஹிகையின் கர்ப்பத்தில் வந்தவரே! ராகுவே! உம்மை வணங்குகிறேன்.கேதுவின் சஞ்சாரத்தினால், யோகப் பலன்களைக் பெறும் ராசி; மிதுனம், துலாம், தனுசு, மீனம்.சுமாரான பலன்களைக் பெறும் ராசி; விருச்சிகம், கும்பம். மேஷம், கடகம்பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசியினர்; சிம்மம், கன்னி, மகரம், ரிஷபம்ஸ்லோகம்:பலாஸ புஷ்ப ஸங்காஸம்தாரகா கிரஹ மஸ்தகம்ரெளத்ரம் ரெளத்ராத் மகம் கோரம்தம் கேதும் ப்ரணமாம்யஹம்பொருள்: புரசம் பூவைப் போல சிவந்த நிறம் கொண்டவரே! நட்சத்திரங்கள், கிரகங்களில் தலையானவரே! கோபம் மிக்கவரே! கோர வடிவானவரே! கேது பகவானே! உம்மை வணங்குகிறேன். வாழ்வில் சாதனை படைக்க சாயாகிரகங்களான ராகு கேதுவை இன்று வழிபடுவோம்.முழு பலன் அறிய கிளிக் செய்யவும்.. https://temple.dinamalar.com/rasi_palan.php?cat=475


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !