உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி வழிபாடு; பக்தர்கள் பரவச தரிசனம்

கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி வழிபாடு; பக்தர்கள் பரவச தரிசனம்

திருப்பூர் சோழாபுரி அம்மன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. தங்க கவச அலங்காரத்தில் ராகு, கேது பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


இதேபோல் அருப்புக்கோட்டை கோயில்களில் ராகு கேது பெயர்ச்சி நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டிற்கான ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில், ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடந்தது. ராகு கேதுவிற்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதேபோன்று சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருச்சுழி திருமேனிநாதர் கோயில் ராகு கேது பெயர்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !