சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :308 days ago
தியாகதுருகம்; சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனை ஊஞ்சலில் வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடி ஆராதனை நடத்தினர். திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.