கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :492 days ago
கோவை; சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம் மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெங்கடாஜலபதி பெருமாளை தரிசனம் செய்தனர்.