தங்கவயல் முனீஸ்வரர் கோவிலில் 154ம் ஆண்டு விழா
ADDED :257 days ago
தங்கவயல்; உரிகம் பேட்டை சாலை அசோகா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலின் 154ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. தங்கவயலின் பழமையான இக்கோவிலில் ஸ்ரீ முனீஸ்வரர், இருளாச்சியம்மன், கணபதி, சப்த கன்னியர்கள், நவக்கிரஹ கோவில்களும் உள்ளன. கணபதி பூஜையுடன், யாக பூஜைகள் நடந்தது. அடுத்து முனீஸ்வரருக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையுடன் பிரசாத வினியோகமும் நடந்தது. தங்க வயல் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள், தங்களின் குல தெய்வமான சுவாமிக்கு பொங்கலிட்டு நேர்த்திக் கடன் செலுத்தி, சிறப்பு பூஜைகளை நடத்தினர். ஏற்பாடுகளை அர்ச்சகர் ராஜமாணிக்கம், கருணாகரன், ராஜசேகரன், வினோத்குமார் உட்பட பலர் செய்திருந்தனர்.