அச்சிறுபாக்கம் இளங்கிளியம்மன் சமேத ஆட்சீஸ்வரர் திருக்கல்யாணம்
ADDED :424 days ago
அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளி அம்மன் சமேத ஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவின் ஐந்தாவது நாள் திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு விநாயகர், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்தது. ஆட்சீஸ்வரருக்கும் இளங்கிளி அம்மனுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண உத்சவம் நடந்தது. பஞ்சமூர்த்திகளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, முக்கிய நிகழ்வாக திருத்தேர் உத்சவம் நடைபெறுகிறது.