குங்கும காளியம்மன், நாக கன்னியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED :156 days ago
கமுதி; கமுதி அருகே வடுகபட்டி கிராமத்தில் செல்வவிநாயகர், சுந்தர்ராஜ பெருமாள், குங்கும காளியம்மன், நாக கன்னியம்மன், கருப்பணசாமி, கோயில் வருஷாபிஷேக விழா, முத்துராமலிங்கத்தேவர் 12ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் பால்குடம்,அக்னிசட்டி, வேல்குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.குங்கும காளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்பு கோயில் முன்பு காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக வந்து கோயிலில் வைத்தனர். இரவு 7:00 மணிக்கு 508 விளக்குபூஜை நடந்தது.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.