ஜபாலி ஆஞ்சநேய சுவாமிக்கு திருப்பதி கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம்
ADDED :152 days ago
திருப்பதி; அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை காலை திருமலையில் உள்ள ஜபாலி ஆஞ்சநேய சுவாமிக்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு பட்டு வஸ்திரங்களை வழங்கினார்.
கோயிலுக்கு வந்த தேவஸ்தான தலைவரை பூசாரிகள் வரவேற்று அவரது தரிசனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, அவருக்கு சிந்தூர் வஸ்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அவர் கூறியதாவது; அனுமன் ஜெயந்தி நாளில் ஜபாலி அனுமனுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்குவது தேவஸ்தானத்தின் பாரம்பரியம் என்று கூறினார். அனைத்து பக்தர்களுக்கும் அனுமனின் ஆசி கிடைக்க பிரார்த்திப்பதாக அவர் கூறினார். நிகழ்ச்சியில் விஜிஓ சுரேந்திரா, சுகாதார அதிகாரி மதுசூதன் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.