செங்கழுநீர் அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா; மஞ்சள்நீர் உற்சவம்
ADDED :207 days ago
மயிலம்; மயிலம் அருகே உள்ள தென் கொளப்பாக்கம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினசரி பால், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடந்த 18ம் தேதி காத்தான் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள்நீர் உற்சவம் நடந்தது. செங்கழுநீர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.