உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


காரைக்கால், திருநள்ளாறு பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலின் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அணுக்கரகமூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிக விமர்சியாக நடைபெறும். இந்தாண்டு பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கொடிமர விநாயகருக்கு மஞ்சள், பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவங்களால் ஆன அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனிதநீர் கொண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க கொடிமரத்தில் கொடி ஏற்றினர். பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் வரும் 31ம் தேதி செண்பக தியாகராஜர் உன்மத்த நடனம் நிகழ்ச்சி மற்றும் ஜூன் 4ம் தேதி பஞ்சமூர்த்தி ரிஷப வாகனத்தில் சக்கர கோபுர வீதி உலா, 6ம் தேதி 5 தேரோட்டம், 7ம் தேதி சனீஸ்வர பகவான் தங்கக் காக்கை வாகனத்தை வீதி உலா, 8ம் தேதி தெப்ப திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !