உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் பகவதி அம்மன் கோவிலில் மழை வேண்டி 108 சங்காபிஷேகம்

நத்தம் பகவதி அம்மன் கோவிலில் மழை வேண்டி 108 சங்காபிஷேகம்

நத்தம்; நத்தம்-அசோக்நகர் பகவதி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 108 சங்குகள் அமைக்கப்பட்டு அதில் வில்வ இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. பின்னர் கோ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் பகவதி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !