உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

வீர ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அடுத்த, வெலமகண்டிகை கிராமத்தில் உள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம், 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு கடந்த, 22ம் தேதி கணபதி பூஜையுடன் கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, தீமிதி திருவிழா நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டனர். உற்சவர் வீர ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !