கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உற்சவமூர்த்தி பிரதிஷ்டை விழா
ADDED :231 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உற்சவமூர்த்தி பிரதிஷ்டை நடந்தது. விழாவை முன்னிட்டு, முன்னதாக சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் கல்யாண சீனிவாச சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியையொட்டி பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்தபடி உற்சவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.