உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயிலில் விபீஷனருக்கு பட்டாபிஷேகம்

தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயிலில் விபீஷனருக்கு பட்டாபிஷேகம்

ராமேஸ்வரம்; ராமநாதசுவாமி கோயிலில் 2ம் நாள் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீ ராமர், விபீஷ்னருக்கு பட்டாபிஷேகம் சூட்டினார்.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை 2ம் நாள் விழாவையொட்டி இன்று கோயிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் விபீஷனர் புறப்பாடாகி கோதண்ட ராமர் கோயிலில் எழுந்தருளினர். இங்கு கோயில் குருக்கள் கூறியது, சிறையில் உள்ள சீதையை விடுவிக்க ராவணனிடம், தம்பி விபீஷனர் வலியுறுத்தினார். ஆத்திரமடைந்த ராவணன், தம்பியை அவமரியாதை செய்தார். இதனால் வேதனையில் விபீஷனர், அங்கிருந்து வான் வழியாக புறப்பட்டு ராமரிடம் அடைக்கலம் வேண்டி தனுஷ்கோடி வருகிறார். அப்போது சீதையை மீட்க ராமர், லட்சுமணர், அனுமான், வானர சேனைகளுடன் ஆலோசனை நடத்திய போது, விபீஷனர் உளவு பார்க்க வருவதாக அனுமான் கூறினார். உடனே ராமர், அடைக்கலம் தேடி வருவதை பாதுகாப்பதே தர்மம் என கூறி கடல் நீரை எடுத்து வரச்சொல்லி, இலங்கை மன்னராக விபீஷனரை அறிவித்து புனித நீரை ஊற்றி பட்டாபிஷேகம் சூட்டினார் என தெரிவித்தார். இதனையடுத்து கோயில் குருக்கள் விபீஷனருக்கு, தலைப்பாகை அணிவித்து பட்டாபிஷேகம் சூட்டினார். இதன்பின் ராமர், விபீஷனருக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !