மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :190 days ago
கோவை; மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மதுக்கரை மரப்பாலம் அருகே வனத்தையொட்டி தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பக்தர்கள் இங்கு கிரிவலம் சென்று வழிபாடு செய்வர். அதன்படி நேற்று வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்துடன் தீப ஒளியில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர். தொடர்ந்து கிரிவலம் சென்றனர்.